SELANGOR

பாக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து சிலாங்கூரில் நிலைத்திருக்கும்

ஷா ஆலம்,டிசம்பர் 5:

நாட்டின் 14வது பொது தேர்தலில் நடப்பு அரசியல் சூழலில் பாக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூரில் சில சரிவினை எதிர்நோக்க வாய்ப்பு இருந்தாலும் தொடர்ந்து அக்கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறந்தாலும் சிலாங்கூரை பாக்காத்தான் கூட்டணி இழக்காது என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் சுஹாய்மி ஷஃபி தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழலில் தேசிய முன்னணி சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவது என்பது இயலாத காரியம்.சிலாங்கூர் மாநில அரசின் திறன்மிக்க நிர்வாகத்திறனும் மேம்பாடு நடவடிக்கைகளும் பெரும் சாதமாய் இருக்கும் பட்சத்தில் ஜி.எஸ்.டி மற்றும் பெட்ரோல்,டீசல் விலை ஏற்றங்கள் தேசிய முன்னணிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் நினைவுறுத்தினார்.
வாக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்ட அவர் சிலாங்கூர் கைமாறும் என்பது பகல் கனவு என்றார்.பொருளாதார சூழல் மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் நிலையில் மக்களின் ஆதரவை பெறுவதற்கு தேசிய முன்னணிக்கு சாதகமான சூழலில் எதுவுமில்லை என்றும் கூறினார்.
அதேவேளையில்,”சுனாமி மெலாயு” என்பது தேசிய முன்னணியும் தேர்தல் ஆணையமும் கைக்கோர்ப்பதையோ அல்லது மலாய் வாக்காளர்கள் ஒரே இடத்தில் கொண்டு சேர்ப்பதில் அவர்களுக்கு கைகொடுக்கலாம் என அவர்கள் கருதலாம் என்றும் குறிப்பிட்டார்.எல்லை பிரிப்பு சாத்தியமானால் ஒருவேளை அம்னோவின் கனவுக்கு அஃது சாதகத்தை ஏற்படுத்தலாம்.அவ்வாறு நிகழ்ந்தால் தேர்தல் ஆணையம் சுயட்சையாய் இயங்கும் அமைப்பு என்பது பொய்யாகி விடும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

சிலாங்கூரை கைப்பற்ற் அம்னோ சிலாங்கூர் இன்னமும் மக்களுக்கான பணிகளுக்கு அந்நியமாகி சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை தொடர்ந்து சில தரப்போடு கைகோர்த்து மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால்,அஃது ஒருபோதும் அவர்களுக்கு கைகொடுக்காது என்றார்.
அம்னோ,தேசிய முன்னணியோடு ஒப்பிடுகையில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும் ஆதரவு இருப்பதாக அவர் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை வழி நடத்தினாலும் புத்ரா ஜெயா இன்னமும் மந்தமாகவே இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதற்கிடையில்,முன்னாள் மந்திரி பெசார் அவர்களோடு கைகோர்த்தாலும் அஃது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறிய அவர் சிலாங்கூரின் ஆளுமையும் அதன் திறன்மிக்க நிர்வாகமும் மேம்பாடும் வரும் பொதுத் தேர்தலில் பத்தாங்காளி,தஞ்சோங் காராங் ஊடுருவி புத்ரா ஜெயாவையும் வென்றெடுக்கும் என சுஹாய்மி நம்பிக்கை தெரிவித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :