NATIONAL

பெர்சே: தேர்தல் ஆணையம் வாக்காளர்களை மதிக்கவில்லை

ஷா ஆலம், டிசம்பர் 21:

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இருக்கும் காலக்கட்டத்தில் எல்லை சீரமைப்பு குறித்த விசாரணையை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம் வாக்காளர்களை மதிக்கவில்லை என்றும் அவர்களின் உணர்வுகளை அஃது பொருட்படுத்தவில்லை என்றும் நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பெர்சே 2.0 அமைப்பு கூறியது.

எல்லை சீரமைப்பு குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அதனை உடனடியாக மேற்கொள்க நினைப்பது அவசியமற்றது என்றும் பெர்சே கூறியது.தேர்தல் ஆணையத்தின் எல்லை சீரமைப்பிற்கு எதிராய் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

புகார்களுக்கு எதிரான விசாரணையில் தேர்தல் ஆணையம் காட்டிடும் அவசரம் அந்த அமைப்பு சுதந்திரமாக இயங்கவில்லை என்றும் அஃது அரசாங்கத்தின் பிரதிநிதியாய் விவேகமற்ற நிலையில் எல்லை சீரமைப்பில் களம்காண்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் எல்லை சீரமைப்பில் நேர்மையான போக்கையும் மதிப்பு மிகுத்தன்மையையும் கையாளவில்லை என்றும் பெர்சே கூறியது.

எல்லை சீரமைப்பு குறித்தும் அதன் விளவுகள் குறித்தும் அதேவேளையில் அதிலிருக்கும் தவறுகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் குறித்தும் விவேகமான பார்வையை பெர்சே முன் வைத்தும் தேர்தல் ஆணையத்திற்கு எல்லை சீரமைப்பிற்கு அனுமதியும் அது தொடர்பிலான விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அது கூறியது.

இஃது சட்டரீதியில் இருக்கும் வாக்காளர்களின் உரிமையை பறித்திடும் நிலையை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் வாக்காளனின் உரிமை கேள்விக்குறியாவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,கிருஸ்துமஸ் விடுமுறை காலத்தில் சிலாங்கூர் வாழ் மக்கள் குடும்பத்தோடு நேரத்தை சந்தோசமாய் கழிக்கும் தருணத்தில் விசாரணையை மேற்கொள்வது தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் உணர்வினை மதிக்காமல் தனிச்சையான ஆளுமையை வெளிப்படுத்துகிறது என்பதை உணர முடிகிறது.

அடுத்தாண்டு செப்டம்பர் வரை கால அவகாசம் இருக்கும் நிலையில் விசாரணையை தேர்தல் ஆணையம் அவசரப்படுத்துவது ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையத்திற்கு இவ்விவகாரத்தில் தனிப்பட்ட அரசியல் நோக்கம் இருப்பதாகவும் இதன் மூலம் வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பெர்சே வர்ணித்தது.

அதேவேளையில், கடந்த செப்டம்பர் 2016இல் எல்லை சீரமைப்பிற்கு எதிராக புகார் செய்தவர்கள் 03-55194273 எனும் எண்ணில் தேர்தல் ஆணையத்தை அழைத்து தத்தம் புகார் குறித்து அறிவதோடு விசாரணை அன்று கலந்துக் கொள்வதையும் உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றும் பெர்சே ஆலோசனை கூறியது.


Pengarang :