MEDIA STATEMENTNATIONAL

மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அம்னோ தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர; ஆனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்!!!

   அன்றாட வாழ்க்கை செலவினங்களை குறைக்க பொது மக்கள் காய்கறி வகைகளை நட கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அஸ்லான் மான் அவர்களின் ஆலோசனை நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு அல்ல. குறைந்த மட்டும் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்கள் பல்வேறு வாழ்வியல் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
    குடும்ப நலனுக்காக சிலர் இரண்டு வேலைகளை மேற்கொண்டு வருவதை பெர்லிஸ் மந்திரி பெசார் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், அவரின் அறிக்கையை கண்டு பெருமிதம் கொள்கிறேன், ஏனெனில் பெர்லிஸ் மந்திரி பெசார் நேரிடையாக பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டார். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டு மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளை எதிர் நோக்கி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
   பிரீம் தொகையை பெறும் குடும்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றால் போது மக்களின் வருமானம் குறைந்துவிட்டது என்று தானே அர்த்தம். பொருட்கள் விலை ஏற்றம் மற்றும் வாழ்க்கை செலவினங்கள் உயர்வு, குறிப்பாக ஜிஎஸ்டி வரியினால் நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
   அன்றாட வாழ்க்கை செலவினங்களை குறைக்க பொது மக்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கொடுத்து வரும் அம்னோ தேசிய முன்னணி தலைவர்களின் நடைமுறைகளை பெர்லிஸ் மந்திரி பெசார் பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன். மாறாக பெர்லிஸ் மந்திரி பெசார், புத்ரா ஜெயாவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அம்னோ தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் அறிவுரை கூறுங்கள். பதவி துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளின் மூலம் தாபோங் ஹாஜி, மாரா, பெல்டா மற்றும் 1எம்டிபி போன்ற இமாலய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் அம்னோ தேசிய முன்னணி தலைவர்களுக்கு முதலில் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
  இருந்தாலும், பெர்லிஸ் மாநில மந்திரி பெசாரின் நேர்மையான முறையில் ஒத்துக் கொண்ட பண்பாட்டை பாராட்டுகிறேன். நாட்டு மக்கள் அம்னோ தேசிய முன்னணியை ஆட்சிக் கட்டிலில் இருந்து வெளியேற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நினைவு படுத்துகிறேன்.
அமீன் அமாட்
கங்கார்
கெஅடிலான் கட்சியின் பெர்லிஸ் மாநில தேர்தல் இயக்குனர்

Pengarang :