NATIONALUncategorized @ta

மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அம்னோக்கு இன்னும் புரியவில்லை

ஷா ஆலம், டிசம்பர் 1:

மலேசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறந்த நிலையில் உள்ளது என்ற அறிவிப்பு, உண்மையில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பிரதிபலிக்கவில்லை என்று ஜூரைடா கமாரூடின் கூறினார். கெஅடிலான் கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரான ஜூரைடா கூறுகையில், அண்மையில் மெர்டேக்கா சென்டர் வெளியிட்டுள்ள ஆய்வில் 15% மலேசிய மக்கள் உணவு உண்ணுவதை குறைத்துக் கொண்டுள்ளனர் என்றும் மேலும்  29% மக்கள் அவசரத்திற்கு ரிம 500 கூட சேமிப்பில் இல்லாமல் உள்ளனர் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது என்று விவரித்தார்.

”  மலேசிய மக்களில் 15%, வருமான பற்றாக்குறை காரணமாக உணவு உண்ணுவதை குறைத்துக் கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவினங்களை குறைக்க இந்த நடவடிக்கையில் மக்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மெர்டேக்கா சென்டர் 1,203 பொது மக்களிடம் கடந்த நவம்பர் 4 முதல் 14 வரை ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

#தமிழ் அரசன்


Pengarang :