SELANGOR

மந்திரி பெசார்: ‘கிலேப்தோகிராசி’ மற்றும் ஊழல் மனித உரிமைக்கு ஒரு சவால்

ஷா ஆலம், டிசம்பர் 9:

ஊழல்களை கொண்டு சுகமாக வாழும் கிலேப்தோகிராட் மனித உரிமைகளுக்கு சவாலாக இருந்து வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இவர்களின் நடவடிக்கை இன்னும்  பிறக்காத குழந்தைகளின் எதிர் காலத்தையும் பாதிக்கும் என்றார். மேலும் கூறுகையில் நன்னெறியற்ற செயல்கள் மூலம் பெற்ற ஆடம்பர வாழ்க்கை மக்களுக்கு சொந்தமானது. ஆனால் மக்களின் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று வீண்விரயம் செய்யப் படுகிறது என்று விவரித்தார்.

மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) உலக ஊழல் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளது மட்டுமில்லாமல் நாட்டின் மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்றார்.

ஒவ்வொரு டிசம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் உலக  ஊழல் எதிர்ப்பு தினமாகவும், டிசம்பர் 10-ஆம் தேதி உலக மனித உரிமை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் அரசன்


Pengarang :