SELANGOR

மந்திரி பெசார் குத்தகை கொடுத்ததை மறுத்தார், எஸ்பிஆர்எம் நேர்மையாக விசாரிக்க வேண்டுகோள்

பண்டார் பாரூ பாங்கி, டிசம்பர் 1:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) கைது செய்திருக்கும் தனது உறவினரின் மகனுக்கு தாம் எந்த ஒரு குத்தகையும் வழங்கவில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதன் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் நேர்மையான மற்றும் தொழில்முறையில் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் மணல் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மாநில நிறுவனமான செமஸ்தா குழுமம் (கெஎஸ்எஸ்பி) வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறது என்றார். எந்த விண்ணப்பங்களும் நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்தின் பரிசீலனைக்கு பிறகு வழங்கப் பட்டதாக கூறினார்.

 

 

 

 

 

”   இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது. மாநில அரசாங்கம், தனியார் நிலத்தில் மணல் குவாரி விண்ணப்பங்களை செமஸ்தா குழுமம் நிர்வாகம் செய்யும். எல்லா டெண்டர்களும் அதன் இயக்குனர் வாரியத்தின் கீழ் வெளிப்படையாக நடக்கிறது. தாம் இந்த நிறுவனத்தில் வாரிய உறுப்பினரும் இல்லை. ஆனாலும் இந்த நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று சிலாங்கூர் ஹாலால் பெருவிழா 2017 அதிகாரப்பூர்வ திறப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் இவ்வாறு அளித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :