SELANGOR

மந்திரி பெசார்: 47,000 மேற்பட்ட தொழில் முனைவர்கள் ஹிஜ்ரா கடனுதவி பெற்றுள்ளனர்

ஷா ஆலம், டிசம்பர் 4:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் 47,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவர்களுக்கு ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் உதவி செய்துள்ளது. இந்த எண்ணிக்கை டிசம்பர் வரை மட்டுமே என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநிலத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களின் (ஐபிஆர்) வழி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

”   சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தை ரிம 100 மில்லியனைக் கொண்டு ஆரம்பித்தது. குறைந்த மட்டும் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்கள் வறுமை நிலையில் இருந்து மீள இத்திட்டம் வழி வகுக்கும். இது வரை ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் 47,761 சிறு தொழில் முனைவர்கள் ரிம 330 மில்லியன் கடனுதவியாக பெற்று பயன் அடைந்துள்ளனர்,” என்று மெலாவாத்தி அரங்கத்தில் நடைபெற்ற சிலாங்கூர் ஹிஜ்ரா தொழில் முனைவர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

 

 

 

 

 

இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி மற்றும்  ஹிஜ்ரா வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் மன்சூர் ஓத்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#தமிழ் அரசன்


Pengarang :