NATIONAL

மலேசியாவின் இறுதி சர்வாதிகாரியாக நஜிப்பாக இருக்கட்டும்!!!

தற்போது ஏற்படுத்தப்பட்ட பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மறுமலர்ச்சி மற்றும் நீதி அடிப்படையில் நிறுவப்பட்டது, மாறாக சொத்துடமை, பணம் மற்றும் தனிநபர் நலன் நோக்கில் அல்ல என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

நீதியின் அடிப்படையில் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதும், மறுமலர்ச்சி கொள்கையை முன்னிலை படுத்தி நாட்டில் இருக்கும் அரசு அமைப்பை மாற்றம் செய்ய வேண்டும். சர்வாதிகார ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். புதிய மலேசியாவை உருவாக்க நம்பிக்கையோடு முன்னின்று காலடி  எடுத்து வைக்க வேண்டும்.

துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வருகை பொது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.  அரசியல் அனுபவம் மகாதீருக்கு உண்டு என்பதனை நாட்டு மக்கள் அறிவார்கள்.

 

 

 

 

 

ஒவ்வொரு மனிதனுக்குள் என்ன இருக்கிறது என்று எல்லா வல்ல இறைவனுக்கே தெரியும். ஆக, பாவ புண்ணியம் ஆகியவைகளை இறைவனிடத்தில் விட்டு விடுகிறேன்.

நாட்டின் நிர்வாகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்த அமைப்பின் மூலம் தான் சர்வாதிகாரிகள் ஒவ்வொன்றாக கிளம்பி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

1998-இன் தன்முனைப்போடு, 2018-ஆம் ஆண்டில் வெற்றியை பதிவு செய்ய உறுதி பூண்ட வேண்டும். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மலேசியாவின் இறுதி சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்.

துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன். மலேசியாவை காப்பாற்றும் முயற்சியில் அவரின் பங்களிப்பை நான் ஆதரிக்கிறேன்.

நஜீப் மலேசிய நாட்டின் இறுதி சர்வாதிகாரியாக இருக்க வேண்டும்!

நாளை நமதே!!!

 

நூருல் ஈசா அன்வார்

கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர்

#தமிழ் அரசன்


Pengarang :