SELANGOR

முன்னாள் மாநில நிதித்துறை அதிகாரியின் பார்வையில் அஸ்மின் அலி

ஷா ஆலம், டிசம்பர் 30:

மற்றவர்களின் கருத்தினை சீர்த்தூக்கிப் பார்ப்பதோடு மரியாதை மற்றும் பொறுமை ஆகியவற்றுடன் வெளிப்படையான போக்கு, நேர்த்தியான செயல் திறன் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் தனித்துவமாய் விளங்குவதாக பணி ஓய்வு பெற்ற நிதித்துறை அதிகாரி டத்தோ நோர்டின் சுலைமான் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறித்து கூறுவதற்கு நிறைய விடயங்கள் இருப்பதாக மேலும் கூறிய அவர் அரசு அதிகாரிகளின் கருத்தினை செவிமடுத்து அதனை சீர்த்தூக்கிப் பார்க்கும் விவேகம் மிக்கவர் அஸ்மின் அலி என்றும் அவர் புகழாரம் சூட்டினார். மேலும், டத்தோஸ்ரீ அஸ்மின் அலியிடம் உயிர்க்கொண்டிருக்கும் உண்மை,நேர்மை அச்கியவை தலைமைத்துவ பண்பின் சான்று என்றும் அவர் நேர்மையான ஒழுக்கத்தின் தக்க சான்று என்றும் கூறினார்.

அரசு வேலை என்பது நிர்ணயம் செய்யப்பட்ட காலம் வரையில் தான்.ஆனால்,டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தின் கீழ் இன்னமும் தாம் வேலை செய்ய ஆர்வமாகவே இருப்பதாகவும் கூறினார். நிதித்துறை என்பது மற்ற துறைகளை போல் பெருமிதம் கொள்ளாமல் அடக்கமான முறையில் மாநில அரசின் வெற்றிகளுக்கு கைகோர்க்கும் உன்னத துறை.இத்துறையில் இதுவரை எனக்கு கொடுக்கப்பட்ட கடமையினை செம்மையாக செய்த திருப்தியை தாம் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தை சிறந்த இலக்கிற்கு கொண்டு செல்ல மாநில மந்திரி பெசார் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் நாட்டிலேயே தனித்துவமானது.அதனை அஸ்மின் அலி போன்ற விவேகமான தலைவர்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும்.அவ்வகையில் அஸ்மின் அலி மக்களுக்கான தலைவராக உயர்ந்திருப்பதாக டத்தோ நோர்டின் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் செயல் திறன்,விவேகமான பார்வை,தூரநோக்கு சிந்தனை ஆகியவை அவருக்கு மட்டும் தனித்துவமாய் இல்லாமல் சிலாங்கூர் மாநில வளர்சியிலும் மேம்பாட்டிலும் அஃது தனித்துவமாய் விளங்குவதாய் நோர்டின் சுலைமான் பெருமிதமாய் குறிப்பிட்டார்.

#வீரத் தமிழன்


Pengarang :