SUKANKINI

ஷா ஆலம் அரங்கம்: இன்னும் முடிவு செய்யப்படவில்லை!!!

ஷா ஆலம், டிசம்பர் 4:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்தும் விண்ணப்பங்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும் இருந்தாலும் பிகேஎன்எஸ் எப்சியின் 2017-இன் மலேசிய கிண்ண ஆட்டத்திற்கு பயன்படுத்தியது போல அடுத்த ஆண்டும் மீண்டும் உபசரணை இடமாக இருக்கும் என்று மாநில இளையோர், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி கூறினார். மாநில அரசாங்கத்தின் முடிவின்படி பிகேஎன்எஸ் எப்சி அணியின் உபசரணை அரங்கமாக ஷா ஆலம் செயல் படும் என்று தெரிவித்தார்.

”  கடந்த பருவத்தில் ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்திய போல் அடுத்த ஆண்டும் பிகேஎன்எஸ் எப்சி அணி பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மலேசிய சூப்பர் லீக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இன்னும் பேச்சு வார்த்தை நடத்த நேரம் இருக்கிறது,” என்று சிலாங்கூர் கால்பந்து சங்கம், ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்தக் கோரும் விண்ணப்பத்தை மேற்கோள்காட்டி இப்படி கூறினார்.

அமிரூடின் மேலும் கூறுகையில், தாம் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்றும் இந்த விடயத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் மாநில அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப் படும் என்று விவரித்தார்.

 

 

 

 

 

 

#தமிழ் அரசன்


Pengarang :