SELANGOR

ஸ்மாட் சிலாங்கூர் அன்புத்தாய் விவேக அட்டைக்கு பெரும் வரவேற்ப்பு

ஷா ஆலம், டிசம்பர் 15 :

ஸ்மார்ட் சிலாங்கூர் அன்புத்தாய் விவேக அட்டைக்கு சிலாங்கூர் வாழ் அன்னையர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பும் ஆதரவும் கிடைத்திருப்பதாக மாநில சமூகநல பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டரோயா ஹல்வி தெரிவித்தார்.
இத்திட்டத்தை அறிமுகம் செய்த போது இது வெறும் அலங்காரம் மட்டுமே,இது சாத்தியமில்லை என பொறாமையில் முனுமுனுத்தவர்கள் எல்லாம் தற்போது வாயடைத்துப் போனதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் எந்நாளும் மக்களுக்கு பயனான திட்டங்களை மட்டுமே அமல்படுத்துவதாகவும் கூறிய அவர் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவு மிக்க திட்டமும் சாத்தியமானதே என்றும் கூறினார்.
நேற்று இத்திட்டத்திற்கான பதிவு அனைத்து சட்டமன்ற சேவை மையங்களிலும் நடைபெற்ற வேளையில் பெற்றோர்களின் வருகை பிரமிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிலாங்கூர் அரசாங்கத்தின் திட்டத்திற்கு பெரும் ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும்,வருகை அளித்த ஒவ்வொருவரும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்தனர் என்றும் கூறினார்.
இதுவரை தேசிய அளவிலும் மாநில ரீதியிலும் தனித்துவமாய் அன்னையர்களுக்கு எவ்வித திட்டமும் வரையறுக்கப்படாத நிலையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் தனித்துவமாய் விளங்குவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.
அதேவேளையில்,இத்திட்டம் குறித்து தவறான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் முன் வைப்பவர்கள் பொறாமையில் செயல்படுவதாகவும் சிலாங்கூர் மாநில அரசின் நற்பெயரை மாசுப்படுத்த மேற்கொள்ளப்படும் அநாகரிகம் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வளவு சர்ச்சைகளை மேற்கொண்டாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முடியாது.சிலாங்கூர் வாழ் மக்கள் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையிலான மாநில அரசாங்கத்தை நேசிப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து மாநில அரசை ஆதரிப்பதாகவும் கூறினார்.
குடும்ப மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றும் அன்னையர்களுக்கு உதவிடும் நோக்கில் உருவான இத்திட்டம் அன்னையர்கள் மத்தியில் இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாக விளங்குவதாகவும் டாக்டர் டரோயா கூறினார்.

அன்னையர்களின் தியாகம் போற்றும் நிலையில் உருவான இத்திட்டத்தில் பி40 குடும்ப அன்னையர்கள் பெரும் நன்மை அடைவார்கள் என்றார்.
இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப வருமானம் வெ.2000க்கும் குறவாக இருக்கும் குடும்ப அன்னையர்களும் 21 வயதுக்கும் குறைவான பிள்ளைகளை கொண்டவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.

இத்திட்டம் குறித்து யாரும் ஐயம் கொள்ளாமல் தொடர்ந்து விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொண்ட அவர் வீணர்களின் பொய் பிரச்சாரங்களை காதில் போடுக் கொள்ளாமல் முறையாக பதிவு செய்து நன்மை அடையுமாறு கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் ஒவ்வொரு பரிவு மிக்க திட்டமும் மக்களுக்கான நன் திட்டங்கள்.அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட டாக்டர் டரோயா இது குறித்த மேல் விபரங்களுக்கு பொது மக்கள் 03-55256600 எனும் எண்ணிலும் அல்லது www.kiss.com.my எனும் அகப்பக்கத்திலும் முழுமையாக அறிந்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.


Pengarang :