NATIONAL

1எம்டிபியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

ஷா ஆலம், டிசம்பர் 7:

அமெரிக்க நாட்டின் நீதித்துறை அமைப்பு ஒன்று 1எம்டிபியின் சொத்துக்கள் என நம்பப்படும் சுமார் 1.75 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க டாலரை கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் சட்டவிரோதமாய் முதலீடு செய்யப்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் வழியிலான 1எம்டிபியின் சொத்துக்கள் என்றும் அமெரிக்காவின் நீதிபதி ஜேஃப் செஷ்சன் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்கள்,ஊழல்வாதிகள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்கள் இந்த பணங்களின் மூலம் உல்லாசமாக இருந்ததாகவும் அவர் இது குறித்து அவர் உலக வங்கியின் தலைமையகத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பீடு 3.5 பில்லியனாக இருந்தபோதிலும் அவற்றில் ஒரு பாதி மட்டுமே 1எம்டிபியில் சம்மதப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,1எம்டிபியின் மூலம் சுமார் 4.5பில்லியன் நிதியினை பல்வேறு வழிகளில் மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவை சுவிட்ஸ்லாந்து,சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து லக்ஜம்பர்ஃக் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவை உண்மையற்ற நிறுவனங்கள் மற்றும் இணையம் மூலமும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இஃது ஊழலின் உச்சம் என்றும் கூறிய அவர் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கலாம் எனும் சாத்தியத்தையும் மறுக்காத அவர் மலேசிய லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்தின் உயர்பதவி நியமனங்களிலும் அஃது தொடர்ந்திருக்கலாம் என்றும் நினைவுறுத்தினார்.
சுயட்சையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிடும் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருத்தல் வேண்டும்.நாட்டில் நிகழ்ந்திருக்கும் இந்த பெரும் பணமோசடி விவகாரத்தை எந்தவொரு ஒலிமறைவும் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.நாட்டின் பிரதமரும் ஈடுப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் இவ்விவகாரத்தில் லஞசம் மற்றும் ஊழல் ஆணையம் வெளிப்படையான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும்.
1எம்டிபி குறித்த அழுத்தமும் பல்வேறு புகார்களும் கடந்த 3 ஆண்டுகளாய் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் செயல்பாட்டையும் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையம் மேற்கொள்ளாதது பெரும் ஏமாற்றத்திற்குரியது.நாட்டின் பெரும் ஊழல்வாதிகளை லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையம் தற்காக்கிறதா எனும் ஐயமும் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#வீரத் தமிழன்


Pengarang :