ANTARABANGSA

2017-இல் நிருபர்கள் & ஊடகத்துறையை சார்ந்த 65 பேர் மரணம்

பாரிஸ், டிசம்பர் 20:

2017ஆம் ஆண்டு அதன் நிறைவை எட்ட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உலகளாவிய நிலையில் இவ்வாண்டு இதுவரை நிருபர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த 65 பேர் மரணம் அடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை ஆர்.எஸ்.எப் எனப்படும் உலகளாவிய எல்லையில்லா ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டது.

வெளியிடப்பட்ட மரண எண்ணிக்கை தகவலில் தொழில்திறன் ஊடகவியலாளர்கள் 50 பேரும் அடங்குவர்.இந்த எண்ணிக்கை கடந்த 14 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

ஊடகவியலாளர்களுக்கு பெரும் ஆபத்தான நாடாக சிரீயா நாடு விளங்கும் வேளையில் அந்நாட்டில் உயிர் இழந்த ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.அதனை தொடர்ந்து மெக்சிகோவில் 11 பேரும் மாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் மெக்சிகோவில் போதைப்பொருள் விவகாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜெவியர் வால்டெஸ் எனும் நிருபரும் அடங்குவார்.

உயிர் இழந்த 65 பேரில் 39 பேர் கொல்லப்பட்ட வேளையில் மற்றவர்கள் வேலை நேரத்தில் வெடிகுண்டு உட்பட இதர ஆபத்துகளினால் உயிர் இழந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :