ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

12 ஆண்டுகளாக நிலவி வந்த தாமான் ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டப் பிரச்சனைக்குத் தீர்வு

ஷா ஆலம், ஜூலை 18- சபாக் பெர்ணம் தொகுதியில் 12 ஆண்டுகளாக நிலவி வந்த கைவிடப்பட்ட வீடமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு கண்டது சபாக் தொகுதியில் அடையப்பட்ட சாதனைகளில் ஒன்றாகும் என்று அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

தற்போது ரூமா இடாமான் தாமான் ஆயர் மானிஸ் எனப்படும் தாமான் ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டப் பிரச்சனைக்கு தீர்வு கண்டதன் மூலம் அங்கு வீடு வாங்கிய சுமார் 200 பேருக்கு உதவ முடிந்தது குறித்து தாம் பெரிமிதம் கொள்வதாக அகமது முஸ்தாய்ன் ஓத்மான் கூறினார்.

கடந்த 12ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்து அந்த வீட்மைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டது தமக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாகும் என அவர் குறிப்பிட்டார்.

அந்த வீடமைப்புத் திட்டத்தை குத்தகையாளர் மேற்கொண்டு வருவதோடு அடுத்தாண்டு இறுதியில் அது முழுமை பெறும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் ரூமா இடாமான் தாமான் ஆயர் மானிஸ் என மறுபெயரிடப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டம் 222 தரை வரிசை வீடுகளை உள்ளடக்கியுள்ளது. குறைந்த பட்சம் 1,000 சதுர அடி பரப்பளவிலான இந்த வீடுகள் 250,000 வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன.


Pengarang :