NATIONALUncategorized @ta

அபீம்: டிஎல்பியை ரத்து செய்ய கோரிக்கை

ஷா ஆலம், ஜனவரி 4:

மலேசிய இஸ்லாமிய இளைஞர் அமைப்பு (அபீம்), இருமொழி பாடத் திட்டத்தை (டிஎல்பி) ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. அபீம்-இன் தலைவர் முகமட் ரைமி அப்துல் ரஹீம் கூறுகையில் டிஎல்பி ஏற்கெனவே கணிதம் மற்றும் அறிவியல் ஆங்கிலத்தில் போதிக்கும் திட்டம்  (பிபிஎஸ்எம்ஐ) தோல்வி அடைந்தது போல் அமையும் என்று கூறினார்.

இத்திட்டத்தின் அமலாக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது மட்டுமில்லாமல் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

”  கல்வி அமைச்சு ஆங்கில மொழியை வளப்படுத்தும் வகையில் ஆங்கில  மொழி ஆற்றலை மேம்படுத்த வேண்டும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதினால் ஆங்கில மொழி வளம் வளர்ச்சி அடையாது,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கி தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் திட்டம் பல தமிழ் நெஞ்சங்களின் எதிர்ப்புக்களிடையே கல்வி அமைச்சு அமல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

கு. குணசேகரன் குப்பன்


Pengarang :