NATIONAL

அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தி நாட்டை காப்பதே பாக்காத்தானின் இலக்கு

ஷா ஆலம்,ஜன 10:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தி நாட்டையும் மக்களையும் காப்பாத்துவதே ஹராப்பான் கூட்டணியின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கபட்டது.
ஹராப்பான் கூட்டணியில் யாரும் தனித்து இயங்கவும் இல்லை,இங்கு யாருக்கும் முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.அனைவரும் இணைந்து ஒற்றுமையாய் ஒரே இலக்குடன் நகர்வதாக கூறிய ஹராப்பான் கூட்டணியின் கூட்டரசு பிரதேசத்தின் சட்டப் பிரிவு தலைவர் சூல்ஹஸ்மின் ஷரிஃப் கூறினார்.

ஹராப்பான் கூட்டணியின் போராட்டமும் இலக்கும் தனி மனிதர் சார்ந்ததில்லை.அஃது மலேசியாவையும் மக்களையும் அம்னோ தேசிய முன்னணியிடமிருந்து காப்பாற்றும் இலக்கை கொண்டது என்றார்.
தேசிய முன்னணியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவினை எதிர்நோக்கியுள்ள சூழலில் உலகலாவிய நிலையில் மலேசியா மீதான பார்வையும் நன் நிலையில் இல்லாதததை உணர்ந்த வேளையில் நாட்டை காப்பாற்றும் முயற்சியே ஹராப்பான் கூட்டணியின் பெரும் இலக்கு என்றும் கூறினார்.இதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை சிறந்த இலக்கிற்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

அம்னோ தேசிய முன்னணி வீழ்த்தப்பட்டால் அதன் மூலம் முன்னாள் பிரத்தமர் துன் மகாதீர்,டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,லிம் கிட் சியாங்,முகமா சாஃபு ஆகியோர் மட்டும் நன்மை அடையப் போவதில்லை. மாறாய்,நாட்டு மக்கள் அனைவரும் நன்மை பெறுவர் என்றார்.

துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது குறித்து மலேசியர்கள் விவேகமான பார்வையையும் துள்ளியமான சிந்தனையோடும் அதனை கருத்தியல் கொள்ள வேண்டும்.டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதனை மீண்டும் சீர்செய்து சரியான இலக்கிற்கு கொண்டு செல்லவே துன் மகாதீர் களமிறக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

பின்னர் சிறையில் இருந்து வெளியாகும் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் பதவியை ஏற்கும் நடைமுறைகள் கையாளப்படும். நாட்டின் நலன் காக்கப்படும்.அது சாத்தியமானதே என்றார்.நாம் தற்போதைய சூழலில் அமைதி காத்து மீண்டும் நஜிப் மற்றும் அம்னோ தேசிய முன்னணி அதிகாரத்தை ஆட்கொள்ள வழி செய்வதை காட்டிலும் முயற்சி செய்து அதனை உடைத்தெறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மலேசியா நமது நாடு.மலேசியா நமது உரிமை.நஜிப் மற்றும் அம்னோ தேசிய முன்னணியால் நாடு மோசமாவதை தடுக்கும் கடமை நம்முடையது என்றும் கூறிய அவர் தனிப்பட்ட கருத்துவேறுபாடு களைந்து அம்னோ தேசிய முன்னணியை வீழ்த்தி நாட்டை காப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று நினைவுறுத்தினார்.

#தமிழ் அரசன்


Pengarang :