SELANGOR

அரசு முயற்சியில் சிலாங்கூரில் 122 ஆலயங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்றது

பத்துகேவ்,ஜனவரி31:

நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் சிலாங்கூர் மாநிலம் தனித்துவ மாநிலமாக திகழ்வதாக கூறிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இம்மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாடு தலங்கள் மானியங்களை மட்டும் பெறுவதில்லை.மாறாய்,அவை அரசு பதிவேட்டில் அதிகாரப்பூர்மாய் பதிவு செய்வதிலும் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணியினை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஆலயங்கள் இந்துக்களின் புனித தலம்.அவர்களின் சமய நடவடிக்கைகளுக்கும் மேம்பாட்டிற்கும் உரிய இடமாய் விளங்கிடும் கோவில்கள் மீது தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் பார்வை இருக்கும் என்றும் கூறிய அவர் மாநில அரசாங்கத்தின் முயற்சியில் 122 கோவில்கள் அரசு பதிவில் அதிகாரப்பூர்வமாய் இடம் பெற்றிருப்பதாகவும் அஸ்மின் அலி கூறினார்.

பதிவு செய்யப்பட்டிருக்கும் 122 கோவில்களும் எந்தவொரு மேம்பாட்டு திட்டத்தாலும் பாதிக்கப்படாது.மேலும்,அவை எதிர்காலத்தில் பாதுகாப்பான சூழலிலும் இருக்கும் என்பதும் உத்தரவாதம் மிக்கதாய் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆலயங்கள் தொடர்ந்து பாதுகாப்பான சூழலில் அமைந்திருப்பதோடு கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஏற்பட உடைப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மாநில அரசாங்கம் இம்மாதிரியான விவேகமான திட்டத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில்,பாக்காத்தான் கூட்டணியின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைப்படாது எனும் நம்பிக்கையினையும் உறுதியை கொடுத்த அஸ்மின் அலி ஹராப்பான் கூட்டணி மக்களுக்கான கூட்டணி என்றும் முழங்கினார்.கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற எந்தவொரு அசம்பாவிதமும் எங்கள் ஆட்சியில் நிகழாது என்றார்.

எந்தவொரு மதமும் இங்கு புறக்கணிக்கப்படாது.அனைவரும் சம உரிமையை பெற தகுதியானவர்கள்.எந்தவொரு இஸ்லாமியரும் மற்ற மதங்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது இழிவுப்படுத்தவோ கூடாது.இந்நாட்டில் இந்துக்கள் அவர்களின் மதம் சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் சுதந்திரமாக செயல்பட தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும் அஸ்மின் அலி உறுதியளித்தார்.


Pengarang :