NATIONAL

இதுவரை அம்னோ-பிஎன் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துள்ளதா?

அண்மையில் அம்னோவின் சமூக நல பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் ஸம்சூல் அன்வார் நஸரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய முன்னணி எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்வு செய்தால் மக்களுக்கான சமூக நலன் கொண்ட திட்டங்களை அதிகமாக  செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் பார்க்கும் பொழுது அம்னோ தேசிய முன்னணி எதிர் வரும் பொதுத் தேர்தலில் மக்களிடம் ஆதரவை பெறுவதில் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒவ்வொரு திட்டங்களிலும் அம்னோ தேசிய முன்னணியின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் என்ற நோக்கில் செயல்படுத்தி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறது.

இதை விட கொடுமை, அம்னோ தேசிய முன்னணி பல்வேறு இனங்களிடையே சந்தேகத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்கிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்-இன் அரசாங்கம் நிர்வாகம் மக்களின் உணர்வுகளையும் சமூக நலனையும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து அம்னோ தேசிய முன்னணி மக்களின் உணர்வுகளை புரிந்து உள்ளதா?

முகமட் ஹிம்ரான் அப்துல் ஹாமிட்

கெஅடிலான் கட்சியின் பேரா மாநில உதவித் தலைவர்


Pengarang :