NATIONAL

இனரீதியிலான ‘உம்மா’ எழுச்சி மாநாட்டை புறக்கணிப்போம்!!!

ஷா ஆலம், ஜனவரி 16:

மலேசிய நாட்டின் அடிப்படை  உணர்வுகளை மற்றும் இஸ்லாத்தின் நெறிகளை பின்பற்றாத 2018-ஆம் ஆண்டின் ‘உம்மா’ எழுச்சி மாநாட்டின் தீர்மானங்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பல்லின மக்களின் அர்ப்பணிப்பு சரித்திர ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மாநாடு நடத்தப்பட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்.

”  பூமிபுத்ரா மக்களின் பிரச்சினைகள் பூமிபுத்ரா அல்லாதவர்களால் ஏற்படவில்லை மாறாக மோசமான நிர்வாகத் திறனாலும், நிர்வாக கோளாறுகளாலும் மற்றும் சுயநலமிக்க தலைவர்களாலுமே ஏற்பட்டது. சபா மற்றும் சரவாக் பூமிபுத்ராக்கள் மற்றும் பூர்வகுடியினரும் பெரும்பாலும் இஸ்லாம் அல்லாதவர்கள்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவருமான நிக் நஸ்மி நிக் அமாட் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் சிந்தனைகள் மற்றும் இனத்துவாத சித்தாந்தங்கள் நாட்டு மக்களின் தரத்தை உயர்த்தாது என்று கூறினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :