PBTSELANGOR

கிள்ளான் நகராண்மைக் கழகம் ரிம மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்தது

ஷா ஆலம், ஜனவரி 18:

கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) தாமான் பாயூ பெர்டானாவில் ரிம 5,000 மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்தது என்று அதன் தொழில்முறை தொடர்பு பிரிவு இயக்குனர் நோர்பீஃசா மாபீஸ் தெரிவித்தார். பொது மக்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் வழியாக பெறப்பட்ட தகவல் மூலம் அமலாக்க பிரிவினர் மேற்கண்ட நடவடிக்கை எடுத்தனர்.

மதுபான போத்தல்களை வீடமைப்பு பகுதியில் வீசி பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று புகார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

”  ஏறக்குறைய இரவு மணி 10 அளவில் நடவடிக்கையில் ஈடுபட்ட அமலாக்க பிரிவினர் ரிம 5,000 மதிப்பிலான 57 மதுபான போத்தல்களை பறிமுதல் செய்தனர். இந்த கடையில் அந்நிய நாட்டவர்கள் மற்றும் மலேசியர்களும் அடங்கும். கடை உரிமையாளருக்கு பறிமுதல் செய்த பொருட்களை மீட்பதற்கு ஒரு மாதம் காலக்கெடு கொடுக்கப் பட்டுள்ளது. முறையான வியாபார உரிமங்களை கடை உரிமையாளர் கொண்டு வர வேண்டும்,” என்று விவரித்தார்.

நோர்பீஃசா கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட கடை கிள்ளான் நகராண்மை கழகத்தின் வியாபார உரிமம் மற்றும் கிள்ளான் மாவட்ட நில அலுவலகத்தின் அனுமதி எதுவும் இன்றி கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வந்தது என்று குறிப்பிட்டார்.

#தமிழ் பிரியன்


Pengarang :