NATIONAL

‘சிலாங்கூரின் உணர்வு’, தேசிய அளவில் வாக்குகளை திசை திருப்பும்!!!

ஷா ஆலம், ஜனவரி 19:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் மாநில அரசாங்கம் அடைந்த அபரீத வெற்றிகளின் வழி ‘சிலாங்கூர் உணர்வு அலை’  மக்களிடம் ஏற்பட்டு உள்ளது என்று அரசியல் ஆய்வாளர் டத்தோ டாக்டர் ஸம்சூல் அடாபி மாமாட் கூறினார். இந்த சூழ்நிலையில் எதிர் வரும் 14-வது பொது தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சிலாங்கூரில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் வாக்குகள் பெருமளவு பெறக் கூடும் என்றார்.

கடந்த 2016-இல் நடத்திய ஆய்வில் 70% சிலாங்கூர் மாநில மக்கள் அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் மனநிறைவு அடைந்துள்ளது, தொடர்ந்து மக்கள் நடப்பு மாநில அரசாங்கத்திற்கு வாக்களிப்பார்கள் என்பது நிச்சயம் என்று தெரிவித்தார்.

”  சிலாங்கூர் மாநில மக்களின் பேராதரவு தொடரும் நிலையில் எதிர் வரும் போதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியை மத்தியிலும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. ‘சிலாங்கூர் உணர்வு அலை’ மக்கள் மனநிறைவு அடைந்துள்ளனர் என்ற நிதர்சன உண்மையை காட்டுகிறது. இலவச குடிநீர், இலவச பேருந்து மற்றும் அரசு பணியாளர்களின் பேராதரவு போன்றவை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு சாதகமாக அமையும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல், சரித்திர ஆய்வியல் மையம், அரசியல் மற்றும் வியூகம் ஆகிய துறைகளில் அனுபவம் கொண்ட முன்னாள்  விரிவுரையாளர் ஆவார்.

#தமிழ் பிரியன்


Pengarang :