SELANGOR

சிலாங்கூர் அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இல்லை

கோலா லம்பூர், ஜனவரி 12:

சிலாங்கூர் மாநில பொதுச் சேவை ஊழியர்களின் பணியில் எந்த ஒரு அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படுத்தி வருகின்றனர். மாநில நிர்வாகம் மற்றும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட முடிவுகள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தனது அரசாங்கத்தின் தலைமையில் அரசாங்க அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை மாநில ஆட்சிக் குழுவிற்கு சுதந்திரமாக வெளிப்படுத்தலாம் என்று விவரித்தார். அரசாங்க அதிகாரிகளுக்கு கருத்து சுதந்திரம் கொடுக்கவில்லை என்றால் நாட்டில் மக்களாட்சி நடைமுறை செத்துவிடும் என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

”  எடுத்துக்காட்டாக, ஆட்சிக் குழு உறுப்பினர் அறிக்கை தயாரிப்பதற்கு முன், மாவட்ட அதிகாரி தனது கருத்து மற்றும் முழுமையான மதிப்பீட்டை எந்த ஒரு அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக அறிக்கை வாயிலாக தெரிவிக்கலாம். இந்த நடைமுறை அமலில் இருக்கும் வரை சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்லும் என்று உறுதி கூறுகிறேன்,” என்று பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில பதவி ஓய்வு பெறும் மூத்த அரசாங்க அதிகாரிகளின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :