SELANGORUncategorized @ta

சிலாங்கூர் மாநில தலைமைத்துவத்தின் புத்தாண்டிற்கான புதிய அத்தியாயம்

ஷா ஆலம், ஜனவரி 2:

2018-ஆம் புதிய ஆண்டு தொடக்கம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசாங்கத்தின் தலைமைத்துவம், புதிய மக்கள் நலத்திட்டங்களை  தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநில மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில சட்ட மன்ற சபாநாயகர் ஹான்னா இயோ, புதிய மக்களின் மீது அக்கறை கொண்ட  மத்திய அரசாங்கம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”   பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் வீண்விரயம் செய்யக் கூடாது. 2018-இல் நேர்மையான மற்றும் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு அரசாங்கத்தை அடுத்த பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறார் கொடுமை, மகளிர் அடக்குமுறை மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை வஞ்சிப்பது போன்ற செயல்கள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதி, நவீனம் மற்றும் விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறுகையில், சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் அரசாங்கத்தின் பங்கு மிகச்சிறப்பாக இருந்தது என்று கூறினார்.

 

 

 

 

 

 

இதனிடையே சிலாங்கூர் மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் கருத்து கூறுகையில் மக்களின் ஒருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்றார்.

”  மலேசிய நாடு பல்வேறு இனம், மதம் மற்றும் பண்பாடு நிறைந்தது. புதிய வளமான மலேசியாவை உருவாக்குவோம். இதில் எல்லா இனங்களுக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். 2018-ஆம் ஆண்டு மலேசியர்களுக்கு சிறந்த ஒரு ஆண்டாக அமைய வேண்டும்,” என்று விவரித்தார்.

#தமிழ் அரசன்


Pengarang :