NATIONAL

துன் மகாதீர் பிரதமர் வேட்பாளர் – மறுமலர்ச்சியின் நோக்கத்தை பாதிக்காது

கோம்பாக்,ஜனவரி 12:

ஹராப்பான் கூட்டணி துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால் அஃது எந்நிலையிலும் மறுமலர்ச்சியின் நோக்கத்தை சிதைத்து விடாது என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
மேற்கொள்ளப்பட்ட முடிவு நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அஃது ஆட்சியினை வெளிக்கொணர்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்றார்.

இதற்கிடையில்,துன் மகாதீரை முதலில் சந்தித்து பேசியது தாம் தான் என்றும் கூறிய மந்திரி பெசார் நாம் மேற்கொண்டு வரும் ரெபோர்மாசி போராட்டத்தோடு கைகோர்க்க துன் மகாதீர் ஒப்புக் கொண்டு அப்பயணத்தில் பயணிப்பது நமக்கு பெருமையே என்றார். துன் மகாதீர் ஹராப்பான் கூட்டணியின் எதிர்பார்ப்பு மற்றும் இலக்கோடு பயணிக்க ஒப்புக் கொண்ட பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறிய டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஹராப்பான் கூட்டணி எடுத்திருக்கும் முடிவினை மாபெரும் மாற்றத்திற்காக மக்கள் ஏற்றுக் கொண்டால் ஆட்சியை கைப்பற்றினால் 93 வயதில் ஒருவர் நாட்டிற்கு தலைமையேற்பார் என்பதில் ஐயமில்லை என்றார்.

மேலும்,சிலாங்கூர் மாநிலத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநில மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும் தாம் மந்திரி பெசார் எனும் ரீதியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாட்டையும் கவனத்தையும் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
நாட்டின் மொத்த உற்பத்தி வருமானத்திற்கு சிலாங்கூர் பெரும் பங்காற்றி வரும் நிலையில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.அதனை தன்னோடு மாநில தலைவர்களும் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில்,சுல்தான் சிலாங்கூர் சுல்தான் ஷராப்புடின் இட்ரிஸ் ஷா அவர்களும் மாநில செயல்பாடு மற்றும் அதன் விவேகமான நடவடிக்கைகளால் மன நிறைவுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காண்பித்த டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மாநில நிலையில் சிறந்த பங்களிப்பையும் நிறைவான ஆட்சியையும் வழங்கியிருக்கும் நிலையில் ஹராப்பான் கூட்டணியால் மத்திய ஆட்சியாலும் அதனை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :