NATIONAL

நாட்டில் நிர்வாக மறுமலர்ச்சி முக்கியம்; மாறாக அடுத்த பிரதம வேட்பாளர் அல்ல!!!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 6:

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான பாக்காத்தான் ஹாராப்பான் தலைசிறந்த கொள்கைகள் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று நாட்டின் நிர்வாகத்தை கைப்பற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மாறாக, யார் பிரதமர் வேட்பாளர் அல்ல என்று நேற்று நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அனைவரும் பிரதமர் வேட்பாளராக திறன்மிக்க நிர்வாகம் மற்றும் இளையோரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

”   மலேசிய நாட்டு மக்களுக்கு, குறிப்பாக வாக்காளர்களுக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம். தற்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு  என்ன தீர்வு காணப் போகிறோம்,” என்று கலந்துரையாடலில் அமீர் ஹாடி கூறினார்.

சமூக ஆர்வலர் மன்டீப் கர்பால் பேசுகையில், உன்னதமான நோக்கத்தை அடைய பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

”  பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இதை விட ஒருங்கிணைந்த சிந்தனை கொண்ட பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை உருவாக்க வேண்டும். நாட்டின் நீதியான ஆட்சியை அமைக்க அனைவரும் மாற்றுச் சிந்தனையோடு செயல் பட வேண்டும். 60-வது வயதில் உள்ள தலைவர்கள் இளம் வயது பிரதமருக்கு ஆலோசகராக செயல்பட வேண்டும்,” என்று மன்டீப் கர்பால் பேசினார்.

மேலும் அடுத்து பேசிய ஹாரீஸ் ஹிடாஹாம் தனது தலைமைத்துவ திறமையை நிரூபித்துள்ள தலைவரையே பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். புத்ரா ஜெயாவை நிர்வாகம் செய்யும் தலைவர் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கடந்த மூன்று ஆண்டுகளில் சிறந்த தலைமைத்துவம் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட இளம் தலைமுறை தலைவராக வலம் வருகிறார் என்று விவரித்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :