SELANGOR

பிஜே செலாத்தானில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 14:

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு நேற்று டேசா மெந்தாரி 2-இல் பிஜே செலாத்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிஜேஎஸ் 1,2,3,4 , இம்பியான் பைடூரி மற்றும் டேசா மெந்தாரியை சேர்ந்த பொது மக்களுக்கு பொங்கல் பானை மற்றும் கரும்புகளை  பிஜே செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் லீ லோய் சான், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் திரு சுகுமார் மற்றும் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் இந்திய சமுதாயத் தலைவர் திரு அசோகன் ஆகியோர் வழங்கினார்.

இந்த நிகழ்வை வெகுசிறப்பாக ஏற்பாடு செய்த மாநகராட்சி உறுப்பினர் திரு சுகுமார் கூறுகையில்,  பொருட்கள் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமையை கொஞ்சம் குறைக்க தாமும் நாடாளுமன்ற உறுப்பினர் லீ லோய் சானும் எண்ணம் கொண்டதாக தெரிவித்தார். 650 பொங்கல் பானைகள் மற்றும் 1300 கரும்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று சுகுமார் தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் 12 மணி தொடங்கி மாலை 7 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்ததாக கூறினார்.

பொங்கல் தினமான இன்று இம்பியான் பைடூரி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று மேலும் கூறினார். தேர்தல் காலங்களில் மட்டும் தலையை காட்டும் தேசிய முன்னணி தலைவர்கள் குறிப்பாக மஇகாவினர் மக்களுக்கு நன்மைகள் செய்வது போன்று நாடகம் ஆடுகிறார்கள் என்று சுகுமார் சாடினார். 2008 தொடங்கி இன்று வரை தாமும் மற்றும் லீ லோய் சானும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளோம் என்று விவரித்தார். தீபாவளி மற்றும்  பொங்கல் நிகழ்ச்சிகள் , தமிழ்ப்பள்ளி மற்றும் ஆலயங்களிலும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. திரு சுகுமார் பிஜே செலாத்தான் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்

 


Pengarang :