SELANGOR

மந்திரி பெசார்: 50 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் போது ஏன் அமல்படுத்தவில்லை?

பாங்கி, ஜனவரி 11:

எதிர் வரும் 14-வது போதுத் தேர்தலில் மக்களின் ஆதரவை பெறுவதில் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் அம்னோ தேசிய முன்னணியை சிலாங்கூர் மாநில மக்கள் நம்ப வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நினைவுறித்தினார். 50 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி செய்த போது மக்கள் நலத்திட்டங்கள் அமுல்படுத்தாத அம்னோ தேசிய முன்னணி நல்லவர்களை போல் பாசாங்கு காட்டுகிறார்கள் என்று சாடினார்.

”  சிலாங்கூர் நீண்டகாலமாக ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பு வழங்கினர், ஆனால் எதையும் செய்யவில்லை. தற்போது எதிர்க்கட்சியாக உட்கார்ந்து கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில் மாநில அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவினங்களை குறைக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

 

 

 

 

 

 

 

“ஆறு குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்ட போது நிலப் பிரீமியத்தை கட்டவோ அல்லது குறைந்த தொகையாக ரிம 1000 கட்டுவதற்கு வாய்ப்பு வழங்கி உள்ளது,” என்று விவரித்தார். இதற்கு முன்பு, பிரதமரின் சிறப்பு அதிகாரி ஹிஷாம் ஜாலில் சிலாங்கூரில் அம்னோ தேசிய முன்னணி ஆட்சி செய்தால் நிலவரியை குறைப்போம் என்ற அறிக்கையை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவித்தார்.

#தமிழ் பிரியன்


Pengarang :