NATIONAL

மூன்று வாக்களிப்பு மையங்களை மாற்றிய எஸ்பிஆர் நடவடிக்கையை மீது சந்தேகம்!!!

ஷா ஆலம், ஜனவரி 5:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று வாக்களிப்பு மையங்களை புதிய எல்லை மறுசீரமைப்பு என்ற நோக்கில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதிக்கு மாற்றம் செய்யக்கூடாது என்று புக்கிட் காசிங் சட்ட மன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாக்காரன் வலியுறுத்தினார். கிளன்மேரி, தாமான் கிளன்மேரி மற்றும் திதிடிஐ ஜெயா ஆகிய வாக்களிப்பு மையங்கள் எஸ்பிஆரின் நடவடிக்கையின் வழி சுமார் 6,000 வாக்காளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விவரித்தார்.

இந்த மூன்று வாக்களிப்பு மையங்களும் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

”  இந்த வாக்காளர்களை கேட்டால், தாங்கள் ஷா ஆலமில் வசித்து வருவதாகத்தான் கூறுவார்கள். ஏன் பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்? ஏற்கெனவே பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்றத்தில் அளவுக்கு அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். ஆகவே, இதற்கு மேலும் வாக்காளர்களை திணிக்கக் கூடாது,” என்று எல்லை மறுசீரமைப்பு கண்டனங்களை செவிமடுக்கும் நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

#தமிழ் பிரியன்


Pengarang :