NATIONAL

வெற்று வாக்குறுதிகள் வேண்டாம் – மந்திரி பெசார்.

பாங்கி,ஜன 10:

அம்னோ தேசிய முன்னணியை போல் வெற்று வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கும் போக்கினை அரசியல் தலைவர்களும் அது சார்ந்தவர்களும் விட்டொழிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நினைவுறுத்தினார்.
ஒவ்வொரு தலைவர்களும் நன் தலைமைத்துவ பண்பினை கொண்டிருப்பதோடு அவர்கள் பொறுப்பு மிக்கவர்களாகவும் அதேவேளையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.

யார் வேண்டுமானாலும் வாக்குறுதியினை கொடுத்து விடலாம்.ஆனால்,கொடுக்கும் வாக்குறுதியினை பொறுப்பு மிக்க தலைவர்கள் எனும் நிலையில் அதனை நிறைவேற்றுவதே காலத்தில் சிறந்தது என்று அவர் கூறினார்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி இசாம் ஜாலில் சிலாங்கூரில் சொத்துடமைக்கான வரியை குறைப்பது குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் மந்திரி பெசார் இதனை கூறினார்.
மத்திய அரசை காட்டிலும் நடப்பில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் எந்நாளும் மக்களின் வளமான வாழ்க்கைக்கு பல்வேறு நிலைகளில் நடவடிக்கையினை மெற்கொள்வதோடு மக்களின் மேம்பாட்டிலும் தனித்துவ அக்கறையையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அம்னோ தேசிய முன்னணியை போல் கொடுக்கும் வாக்குறுதியை காற்றில் பறக்க விடவில்லை என்றும் கூறிய அவர் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்கள் போற்றும் அரசு என்றும் கூறினார்.

மக்களின் நலனுக்காக சிந்தித்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதில் நடப்பு மாநில அரசு நன் முறையில் செயல் பட்டுவருவதாகவும் இதற்கு முன்னர் இருந்த அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் அரசியல் காரணியங்களுக்கு மட்டுமே முதன்மை அளித்து வந்ததாகவும் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் எதிர்கட்சி எனும் நிலையில் அம்னோ தேசிய முன்னணி பல்வேறு வாக்குறுதிகளை கொடுக்கலாம்.ஆனால்,அஃது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.ஆனால்,நடப்பு மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளும் திட்ட வரைவுகளும் அதன் அமலாக்கமும் மக்களின் நலனை பேணி காப்பதோடு அவர்களின் வாழ்வாதார சிறப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதாக மந்திரி பெசார் நினைவுறுத்தினார்.

#தமிழ் அரசன்


Pengarang :