NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், ஜனவரி 12:

ரொம்பின் வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 குடும்பங்களை சார்ந்த 103 பேர் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இஃது இன்று காலை 8 மணிக்கான பதிவாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிகமாய் தங்க வைக்க இரு மையம் செயல்படுவதாகவும் அதில் தெக்கே தேசிய பள்ளியில் 64 பேரும் லெபான் செண்டோங் பொது மண்டபத்தில் 39 பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பொது தற்கப்பு நிர்வாகி சைனால் யூசோப் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் தொடர்கதையாக இருக்கும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழலில் பகாங்கில் 95 குடும்பங்களை சார்ந்த சுமார் 357 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தற்காலிய துயர்துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேவேளையில்,போலீஸ்,தீயணைப்பு மற்றும் மீட்புப்படை ஆகியோரின் ஒத்துழைப்போடு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செம்மையாகவும் சீராகவும் மேற்கொள்ளப்படுவதும் உறுதி செய்யப்படுவதாகவும் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி,சமூக நல இலாகா மற்றும் மாவட்ட மன்றம்,நில இலாகா ஆகியோரும் தொடர்ந்து களமிறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் வெள்ளம் குறித்தும் அது தொடர்பிலான விவரங்களுக்கும் பொது மக்கள் infobanjir.water.gov.my எனும் அகப்பக்கத்தையும் நாடலாம் என்றார்.அதேவேளையில்,பாலோ ஹினாய் பகுதியில் பகாங் ஆற்றின் நீர் மட்டம் 10.03 மீட்டராக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

#தமிழ் அரசன்


Pengarang :