SELANGOR

ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத்தின் பொங்கல் பொருட்கள் விநியோகம்

கிள்ளான், ஜனவரி 14:

தைப்பொங்கல் திருநாளையொட்டி ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனது சட்ட மன்ற நடவடிக்கை மையத்தில் பொங்கல் பானை மற்றும் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 240 குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

மாநில அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) என 43 திட்டங்களுக்கு இது வரையில் ரிம 2 பில்லியனை மாநில அரசாங்கம் செலவிட்டுள்ளது என்று நினைவு படுத்தினார். அம்னோ தேசிய முன்னணி மத்திய அரசாங்கம் ஜிஎஸ்டி, எரிபொருள் விலை, பொருட்கள் விலை ஏற்றம் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமாருடன், கிள்ளான் நகராண்மை கழக உறுப்பினர் திரு  செபஸ்டியன், இந்திய கிராமத்து தலைவர் திரு வீரன் மற்றும் சமுதாயத் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#தமிழ் அரசன்


Pengarang :