NATIONAL

அம்னோ படுவீழ்ச்சியின் விளிம்பில்….

ஷா ஆலம், பிப்ரவரி 18:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் அறிக்கையினால் அம்னோ தேசிய முன்னணி கலக்கம் அடைந்துள்ளனர். அண்மையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் லங்காவியில் ரிம 1.315 பில்லியன் மதிப்பிலான ஐந்து மேம்பாட்டு திட்டங்களை 11-வது மலேசிய திட்டத்தின் கீழ் அறிவித்தது இந்த கூற்றை நிரூபித்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தற்போது நஜீப், அம்னோ மற்றும் தேசிய முன்னணி லங்காவியை தற்காக்க எல்லா விதமான முயற்சிகளையும் எடுக்கும் என்று தெரிவித்தார்.

”  லங்காவியில் துன் டாக்டர் மகாதீர் முகமட் போட்டியிடப் போவது தற்போதைய சூழ்நிலையில் வெறும் செய்தியே. ஆனாலும், இதன் மூலம் லங்காவி மக்களுக்குரிம 1.3 பில்லியன் நன்மைகள் கிடைத்துள்ளது. எவ்வளவு மோசமான நிலையில் அவர் உள்ளார்? துன் டாக்டர் மகாதீர் முகமட் பல இடங்களில் போட்டியிட போகிறேன் என்று அறிவிக்க வேண்டும். இதன் வழி இந்த தொகுதிகளிலும் அதிகமான மேம்பாட்டு திட்டங்கள் கிடைக்கும்,” என்று டிவிட்டரில் அஸ்மின் அலி கூறினார்.

இதற்கு முன்பு பெர்சத்து கட்சியின் தலைமை ஆலோசகரான துன் டாக்டர் மகாதீர் முகமட் புத்ரா ஜெயா, லங்காவி அல்லது குபாங் பாசு ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 


Pengarang :