SELANGORUncategorized @ta

காஜாங்கில் வெள்ளத்தை எதிர்கொள்ள ரிம145 மில்லியன் செலவில் திட்டம்!!!

காஜாங், பிப்ரவரி 7:

காஜாங் வட்டாரத்தில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளான புக்கிட் டுக்கோங், கம்போங் சுங்கை சிகாமாட் மற்றும் கம்போங் சுங்கை ஜெர்னே ஆகிய இடங்களுக்கு வெள்ளத் தடுப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசாங்கத்திடம் ரிம 145 மில்லியன் கோரியுள்ளதாக காஜாங் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். ஆனாலும், லங்காட் ஆறு மத்திய அரசாங்கத்தின் கீழ் இருப்பதால், அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப் படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக கூறினார். மாநில அரசாங்கம் தற்காலிக நிவாரண நிதி  ஒதுக்கீடுகளை வழங்கி இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் மத்திய அரசாங்கமே தீர்வு காண வேண்டும் என்றார்.

 

 

 

 

 

” சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா, காஜாங் நகராண்மை கழகம், உலு லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் எல்லோரையும் சந்தித்து விட்டேன். பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் கடமைகளை திறம்பட செய்து வருகிறார்கள்,” என்று வெள்ளம் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.


Pengarang :