PBTSELANGOR

கோலா லங்காட் மாவட்ட மன்றம் மதிப்பீட்டு வரி 400% ஆக உயர்ந்ததை மறுத்தது !!!

ஷா ஆலம், பிப்ரவரி 7:

கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) வீட்டுமனைகளுக்கான மதிப்பீட்டு வரியை 400% வரையில் உயர்த்தி இருக்கிறது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று மன்றத்தின் துணைத் தலைவர் முகமட் யாஸீன் அல்வி கூறினார். இதன் அடிப்படையில் கருத்துரைத்த முகமட் யாஸீன் எந்த ஒரு முடிவும் நிதி நிர்வாகக் கூட்டத்தில் தாக்கல் செய்த பிறகு மாவட்ட மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று விவரித்தார்.

மேலும் கூறுகையில், கடந்த 2015-இல் இருந்து சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த மதிப்பீட்டு வரியை விதிக்கப்பட்டது என்றும் தற்போது வீடமைப்பு பகுதியாக மாற்றம் கண்டுள்ளது என்றார்.

”   தற்போது எழுந்துள்ள இந்த சிக்கலில் சம்பந்தப் நிலத்தில் 22 இரண்டு மாடி வீடுகள் கட்டப் பட்டுள்ளது. மாவட்ட மன்றத்தின் கட்டுமான திட்டமிடல் பிரிவு, கடந்த 27 மே மாதம் 2014-இல் மதிப்பீட்டு வரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனாலும், நில உரிமையாளர் மதிப்பீட்டு வரியை எதிர்த்து எந்த ஒரு ஆட்சேபனையும் செய்யவில்லை,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :