SUKANKINI

சிலாங்கூர் அணிக்கு கோலாலம்பூர் அரங்கம் – உதவிட தயார்

ஷா ஆலம்,பிப்ரவரி02:

சிலாங்கூர் கால்பந்து அணி மலேசிய லீக் ஆட்டத்திற்கு கோலாலம்பூர் அரங்கை அதிகாரப்பூர்வ அணியாய் பயன்படுத்துவதற்கு சகல உதவிகளையும் செய்திடவும் அவ்வணிக்கு ஆதரவு கொடுக்கவும் தயாராக இருப்பதாக எப்.எம்.எல்.எல்.பி தெரிவித்தது.

இதற்கிடையில்,அந்த அரங்கை பயன்படுத்துவதற்கு சிலாங்கூர் மாநில கால்பந்து அணி கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் ஒப்புதலை பெற்றிருப்பதையும் எப்.எம்.எல்.எல்.பி வரவேற்றது.

அனுமதியை பெற்றிருந்தால் எங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என்றும் அவர்களோடு ஒத்துப்போகவும் அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆட்டத்தின் தேதிகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் நன் நிலையில் கவனிக்கப்படும்.இது சாத்தியமானால் சிலாங்கூர் அணியோடு கோலாலம்பூர் மற்றும் போலிஸ் படையும் இந்த அரங்கை அதிகாரப்பூர்வமான அரங்காய் பயன்படுத்துவர்.

எவ்வகையில் உதவிகள் தேவை என்பதை அறிந்து அதனை முன்னெடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.சிலாங்கூர் அணியின் முயற்சியை எமது தரப்பு கீழறுப்பு செய்வதாக வெளியான தகவல் அடிப்படையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்பதை மட்டுமே கோரிக்கையாய் விடுத்ததாகவும் அஃது தெரிவித்தது.செலாயாங் அரங்கை காட்டிலும் கோலாலம்பூர் அரங்கம் இரவு நேர ஆட்டத்திற்கும் உகர்ந்தது என்பதால் சிலாங்கூர் அணி அதில் முனைப்பு காட்டுவது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் எவ்வித சிக்கலும் தடையும் இல்லாவிட்டால் கோலாலம்பூர்,போலிஸ் அணியோடு சிலாங்கூர் அணியும் செராஸ் கோலாலம்பூர் அரங்கை மலேசிய லீக்கில் அதிகாரப்பூர்வ அரங்காய் பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :