NATIONAL

சிலாங்கூர் சட்ட மன்ற தொகுதிகள் பங்கீட்டில் இழுவை; அரசியலில் சகஜம் !!!

ஷா ஆலம், பிப்ரவரி 15:

சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தொகுதிகளின் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது சகஜம்தான் குறிப்பாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அரசியலில் புதியது அல்ல என்று ஜசெகவின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நாடாளுமன்றம் இன்னும்  கலைக்கப்படவில்லை என்று தெரிவித்தார் .

”  இது அரசியல் நடைமுறையில் உள்ளதாகும். தேசிய முன்னணி கட்சிகள் கூட இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. ஆகவே, நாடாளுமன்றம் கலைக்கப்படாத வரை, யாரும் அவசரப்பட வேண்டாம். நாம் தொடர்ந்து ஒருவரை ஒருவர் துதி பாடி வந்தால், நமது வாக்காளர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். சிலாங்கூர் மாநிலத்தின் சட்ட மன்ற தொகுதிகளுக்கு மவுசு அதிகம், இதனால், யாரும் கவலைப் பட வேண்டாம். பாக்காத்தான் வெற்றி அடையாத தொகுதிகளை குறி வைத்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது,” என்று சுங்கை பினாங் சட்ட மன்ற சீனப் பெருநாள் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும், சிலாங்கூர் பெர்சத்து கட்சியினர் தொகுதி பங்கீடு தொடர்பில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது எனவும், சிறந்த ஒரு தீர்வை நோக்கி செல்லும் என்று உறுதி அளித்தார்.


Pengarang :