SELANGOR

தாமான் பெர்மாத்தா மாணவர்களுக்கு பள்ளி கட்டண உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

டிங்கில், பிப்ரவரி 11:

தாமான் பெர்மாத்தா தமிழ் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுடனான தேநீர் கலந்துரையாடல் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த சிறமத்தை எதிர்நோக்கும் 44 பெற்றோர்களுக்கு தலா 100 ரிங்கிட் உதவி தொகை வழங்கும் நிகழ்வு மிக விமரிசையாக கடந்த பிப்ரவரி 9-இல்  நடைபெற்றது.

டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹஜி போர்ஹான் சிறப்புரை நிகழ்த்தி இந்நிகழ்வினை துவக்கி வைத்ததோடு ஒவ்வொரு பெற்றோருக்கும் தலா 100 ரிங்கிட் விகிதம் பள்ளி கட்டன சுமையை குறைக்கும் வண்ணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் ரி.ம. 4,400 மதிப்புள்ள இதன் மாதிரி காசோலைய திரு ஹஜி போர்ஹான் பள்ளி மேலாளர் வாரிய பொருளாளர் திரு குணசேகரினிடம் வழங்கினார்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைப்பெற உறுதுணையாக இருந்த சகோதரர் சந்திரன் (டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம்), பள்ளி நிர்வாகம் , பள்ளி மேலாளர் வாரியம் , பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் , டினேஷினி உணவகம் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் அனைவருக்கும் போர்ஹான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பல சவால்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகளுக்காக தமிழ் பள்ளிகளை தேர்வு செய்யும் அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செப்பாங் நகராண்மை கழக உறுப்பினர் தீபன் சுப்பிரமணியம் அவர்கள் அதன் தொடர்பில்  விவரித்தார்.

தகவல்:
தீபன் சுப்ரமணியம்


Pengarang :