SELANGOR

தேசிய முன்னணி அரசாங்கத்தின் பலவீனத்தால் 19,351 மலிவுவிலை வீடுகள் கட்டப்படவில்லை

ஷா ஆலம்,பிப்ரவரி 13:

சிலாங்கூரில் 9 மக்கள் வீடமைப்புத் திட்டம் இரத்தானது தொடர்பில் அம்னோ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மையில் அரசியல் நோக்கம் கொண்டது. மேலும்,அவர்கள் தேசிய முன்னணி கொண்டிருக்கும் பலவீனத்தை மறைத்து சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது பழி சுமத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக மாநில வீடமைப்பு,மேம்பாடு மற்றும் நகர்புற நல்வாழ்வு பிரிவின் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் அப்துல் சமாட் கூறினார்.

சிலாங்கூரில் 9 மக்கள் வீடமைப்புத் திட்டம் ரத்தானதிற்கு உண்மையான காரணம் என்னவென்பதை தேசிய முன்னணி அறிந்திருந்தும் அரசியல் காரணியத்திற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர்கள் பரப்பி வருகிறார்கள் என்றும் சாடினார்.

சம்மதப்பட்ட வீடமைப்பு திட்டம் குறித்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதனை மாநில கண்காணிப்பு குழு முறையாக கவனித்தே வந்துள்ளதோடு,அவர்கள் தங்களின் கடமையையும் முறையாகவே செய்தும் வந்துள்ளனர்.

மேலும்,அத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற வீடமைப்பு நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளில் காலதாமத்தை கொண்டிருக்கும் பட்சத்தில் சம்மதப்பட்ட நிறுவனங்களுக்கு நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பட்ட நிலையில் அவர்கள் தரப்பில் எவ்வித நன் செயல்பாடும் இல்லாத சூழலில்தான் அவர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் சம்மதப்பட்ட நிறுவனங்களால் தனித்து விலையோடு எவ்வித வீடுகளையும் கட்ட முடியாது.இந்த இயல்பான விதிமுறைகூட தேசிய முன்னணி அறிந்திருக்காதது அவர்களின் பலவீனத்தின் சான்று என்றார்.

எனவே,சிலாங்கூர் மாநிலத்தில் அனுமதி ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள் சிலாங்கூரில் மீண்டும் எவ்வித வீடுகளையும் கட்ட முடியாது.அவர்கள் மீண்டும் சிலாங்கூர்கூ வீடுகளை கட்டுவதற்கும் மீண்டும் முறையான விண்ணப்பத்தை அவர்கள் செய்திட வேண்டும் என்றார்.

இவை முற்றிலும் தேசிய முன்னணி காலத்தோடு ஒப்பிடுகையில் வேறுப்பட்டது என விளக்கிய அவர் கடந்தக்காலங்களில் மலிவுவிலை வீடுகளை கட்டுவதற்கு முன்னர் அவர்கள் வேறு விலையிலான வீடுகளை கட்டலாம்.ஆனால்,நடப்பில் அது முடியாது.முதலில் மலிவுவிலை வீடுகளை கட்டிய பின்னரே மற்ற வீடுகளை கட்ட முடியும் எனவும் விளக்கினார்.

இந்நிலையில் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்று சொத்துடமை வாரியத்தின் (LPHS) விவரத்தின் அடிப்படையில் தேசிய முன்னணியின் கால்க்கட்டத்தில் சுமார் 19,351 வீடுகளை கொண்ட 56 வீடமைப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு,அஃது பின்னர் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
இதில் வேடிக்கை என்னவெனில் சம்மதப்பட்ட வீடமைப்பு நிறுவனங்கள் சம்மதப்பட்ட நிலத்தை மற்ற நிறுவனங்களுக்கு விற்று விடுகிறார்கள்.நிலத்தை வாங்கிய நிறுவனம் அந்நிலத்தில் மலிவுவிலை வீடுகளை கட்டுவதற்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.விதிமுறையை சரியாக அறிந்திருக்கவில்லை எனும் காரணத்தை முன் வைத்து அணுமதியும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இன்றைக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் எச்சரிக்கைகளை அன்றையக் காலக்கட்டத்தில் தேசிய முன்னணியும் கடைபிடித்திருந்தால் காலதாமதமாகும் வீடமைப்புத் திட்டங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது.அதுமட்டுமின்றி,சம்மதப்பட்ட நிறுவனங்களின் அலட்சியங்களும் தொடராது எனறும் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை நன்கு உணர்ந்தால் இன்றைய் சிலாங்கூர் அரசாங்கம் இவ்விவகாரத்தில் தெளிவாகவே செயல்படுவது தெரிய வந்துள்ளதோடு கடந்த 2008 க்கு முன்னர் இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் தான் இவ்விவகாரத்தில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்றார்.மேலும்,வீடமைப்பு நிறுவனங்களை கண்டு தேசிய முன்னணி அரசாங்கம் அஞ்சியதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் பின் வாங்கியதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

ஆனால்,இன்று சிலாங்கூர் மாநில அரசாங்கம் அலட்சியத்தோடு செயல்படும் வீடமைப்பு நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தயங்காததால் அவர்கள் சிலாங்கூர்கூ வீடுகளை கட்டுவதில் பெரும் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும்,சிலாங்கூரில் ரத்தான வீடமைப்புத் திட்டம் மொத்த திட்டங்களோடு ஒப்பிடுகையில் மிக சிறிய எண்ணிக்கையை கொண்டதே.நடப்பில் சிலாங்கூரில் 179 வீடமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 17 திட்டங்கள் முடிவுற்று மக்கள் குடியேறி விட்டனர்.மேலும்,29 திட்டங்களில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,சம்மதப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் ரத்தானதால் வீடுகளை வாங்கியவர்கள் கைவிடப்பட்டதாக வெளியாக தகவல் அர்த்தமற்றது.இம்மாதிரி உண்மைக்கு புறம்பான தகவல் வெளியிடுவோர் உண்மையில் வீடமைப்பு திட்டத்தின் உண்மை செயல்முறைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதுதான் இயல்பியல் நிஜம் என்றும் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் இதுபோன்ற தகவல்கள் உண்மையில் கண்மூடிதனமானது என்று சாடிய அவர் இது தொடர்பில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார் என்றார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளும்.வீடமைப்பு நிறுவனங்களுக்கு ஒருபோதும் பணிந்துப்போகாது என கூறிய அவர் மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் ஒருபோதும் பாதிக்க மாட்டார்கள் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் எல்லாவற்றையும் அரசியலாக்கி மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கையினை தேசிய முன்னணியினர் கை விட்டுவிட்டு கொஞ்சமாவது அரசியல் முதிர்ச்சியினை காட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :