NATIONAL

தொகுதி மறுசீரமைப்பு: சிலாங்கூர், மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் எதிர்த்து மனு!!!

ஷா ஆலம், பிப்ரவரி 14:

மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இரண்டாவது  தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரைகளை எதிர்த்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று ஏழு மனுக்களை சிலாங்கூர் மாநில தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. சிலாங்கூர் மாநிலத்தின் மனுக்களை மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, தனது அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபியி மூலம் தாக்கல் செய்தார்.

கடந்த செப்டம்பர் 15, 2016-இல் தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரைகளை எதிர்த்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் மனுவை நிலைநிறுத்த கோரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

”   கடந்த செெப்டம்பர் 15, 2016-இல் தேேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள  தொகுதி மறுசீரமைப்பு  பரிந்துரைகள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்க்கு எதிரானது. சட்டத்தை பின்பற்றாமலும் வாக்காளர்களிின் விவரங்கள் இல்லாமல் இருப்பதை ஏற்கனவே நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,” என்று விவரித்தார்.


Pengarang :