NATIONAL

பாக்காத்தானில் நெருக்கடி ஏதும் இல்லை !!!

ஷா ஆலம், பிப்ரவரி 18:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற தகவலை பரப்பி வரும் தரப்பினரின் கூற்றை  சிலாங்கூர் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் சுஹாய்மி ஷாபியி மறுத்தார். இந்த விடயத்தில் ஒவ்வொரு உறுப்புக் கட்சிகளின் கருத்து சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அமைந்தது என்று தெரிவித்தார்.

”  நான் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் ஒரு நெருக்கடி நிலவுகிறது என்று நினைக்கவில்லை, மாறாக வெளிப்படையாக ஒவ்வொரு கட்சிளும் தங்களின் கருத்துக்களை வெளியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. ஒவ்வொரு உறுப்புக் கட்சிகளுக்கும் தனித் தனியே சிறப்பு செயல்பாடுகள் இருக்கின்றன. இதனால்  பேச்சுவார்த்தை நடக்கும் போது கொஞ்சம் கடினமாக இருந்தது .இந்த சூழ்நிலையை அரசியல் விரோதிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது,” என்று சீனார் ஹாரியான் நேரலை நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .

பாக்காத்தான்  ஹாராப்பான் கூட்டணி அமைத்ததில் இருந்து தேர்தல் இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநாடுகளை நடத்தி தலைவர்களின் கருத்துகளை கேட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார். சிலாங்கூரில் அரசியல் சித்தாந்தங்களை கடந்து மக்களுக்கு நன்மைகள் சென்று அடைய அனைத்து தரப்பினரும் உழைக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் தொகுதி பங்கீடுகளை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.


Pengarang :