NATIONAL

பாஸ் கட்சியை கெஅடிலான் ஒதுக்கவில்லை !!!

ஷா ஆலம், பிப்ரவரி 16:

பாஸ் கட்சியை கெஅடிலான் ஒருபோதும் ஒதுக்கியது இல்லை என்றும் மக்கள் கூட்டணியை விட்டு வெளியேறுமாறு பணிக்கவும் இல்லை என்று சிலாங்கூர் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் சுஹாய்மி ஷாபியி கூறினார். பாஸ் கட்சியே கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றது. இதற்கு மேலாக, கெஅடிலான் கட்சியுடன் இருந்த பரஸ்பர உறவையும் துண்டித்துக் கொண்டது அனைவரும் தெரிந்த ஒன்றுதான் என்று சுஹாய்மி கூறினார்.

பாஸ் கட்சி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியில் சேரவில்லை என்றாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை வழி நடத்தும் மூன்று கட்சிகளில் ஒரு கட்சியாக திகழ்கிறது என்றார். கடந்த 13-வது பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு சிலாங்கூர் மாநில மக்கள் பேராதரவு அளித்தார்கள் என்பதை சுஹாய்மி சுட்டிக் காட்டினார்.

சிலாங்கூர் மாநிலத்தை எதிர் வரும் 14-வது பொதுத்  தேர்தல் வரையில் நடப்பு அரசாங்கம் தொடர்ந்து வழி நடத்தும் என்றும் பாஸ் கட்சி, அதில் ஒரு முக்கிய அம்சமாக திகழும் என்று ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளருமான சுஹாய்மி ஷாபியி கூறினார்.

தகவல்: சீனார் ஹாரியான்


Pengarang :