SELANGOR

பிஜே செலாத்தானில் தித்திக்கும் பொங்கல் திருவிழா

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 4:

பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சான், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் திரு சுகுமார் மற்றும் தாமான் மேடான் வட்டார மக்கள் சேவகர் திரு அசோகன் தலைமையில் தைப்பொங்கல் திருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாமான் மேடான் பாரூ வீடமைப்பு பகுதி மைதானத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் பல்வேறு பண்பாட்டு விளையாட்டுக்களை  ஏற்பாட்டாளர்கள் அரங்கேற்றம் செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹீ லோய் சான், ஜிஎஸ்டி வரியினால் பொருட்கள் விலை ஏற்றம் கண்டு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை  கைப்பற்றி சாதனை படைக்கும் போது இந்த வரி அகற்றப்பட்டு விடும் என்று உறுதி அளித்தார்.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினரான திரு சுகுமார், இந்திய சமுதாயம் நஜீப் ரசாக் தலைமையில் கொண்டு வந்துள்ள ‘இண்டியன் புளூ பிரிண்ட்’ திட்டத்தை கண்டு ஏமாந்து விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 60 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தும் அம்னோ தேசிய முன்னணி மற்றும் மஇகா இந்தியர்களின் நலனை பேணிக் காக்கப் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். ஆகவே, எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் இந்திய சமுதாயம் ஆதரவு வழங்குவதன் மூலம் புத்ரா ஜெயாவை கைப்பற்ற முடியும் என்றும், இந்த மாற்றத்தின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று சூளுரைத்தார்.

இதனிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சமூக சேவகர் திரு அசோகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


Pengarang :