SELANGOR

புத்ராஜெயாவின் வரவு செலவு திட்டத்தை ஒப்பிட்டால் 1% மட்டுமே, ஆனால் முழுமையான நன்மைகளை அளித்திருக்கிறது

உலு கிள்ளான், பிப்ரவரி 10:

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ரிம 300 பில்லியனை நெருங்கிய வேளையில், சிலாங்கூர் மாநிலம் வெறும் ரிம 3.2 மில்லியன் அல்லது புத்ராஜெயாவை ஒப்பீடு செய்தால் 1% மட்டுமே, ஆனாலும் சிலாங்கூர் மாநில மக்கள், இதன் மூலம் முழுமையான பயன் அடைந்தனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநில நிதி நிர்வாகம் திறன்மிக்க முறையில் செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வருகிறது. மாநிலத்தின் வளம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வழி பயன் தந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

”  சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத் தொகை மிகச் சிறியது. இந்த ஆண்டு ரிம 3.2 பில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது புத்ரா ஜெயாவை ஒப்பிடும் போது 1% தான். மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ரிம 300 பில்லியன் ஆகும். சிலாங்கூர் மாநிலம் மிகச் சிறிய வரவு செலவுத் திட்டத்தில், மக்களுக்கு பல்வேறு பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,” என்று விவரித்தார்.


Pengarang :