SELANGOR

ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் இந்திய சமுதாயத்துடன் களம் இறங்கினார்

ஷா ஆலம், பிப்ரவரி 11:

ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி கம்போங் ஜாவா, நான்காவது மைலில் நடைபெற்ற ஒன்று கூடும் நிகழ்ச்சியில் இந்திய சமுதாயத்துடன் களம் இறங்கி மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களின் நன்மைகளை விளக்கினார். சுமார் 100 சுற்றுவட்டார பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சட்ட மன்ற உறுப்பினரின் விளக்கத்தை செவிமடுத்து மாநில அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பதிந்துக் கொண்டனர்.

முதியோர்களுக்கும் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும், சுஹாய்மி பொருள் உதவிகளை வழங்கினார். கடந்த ஆண்டு தொடங்கி ஆறு வெவ்வேறு இடங்களில் இதே போன்ற உதவிகள் வழங்கப்பட்டன என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

”  இந்த திட்டத்தின் மூலம் சுமார் 800 குடும்பங்கள் பலன் அடைந்துள்ளனர். கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கையை செயல்படுத்தி வருகிறோம். தைப்பொங்கலை கொண்டாடும் தமிழர்கள் இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் ஜிஎஸ்டி வரியினால் விலையேற்றம் கண்டு வருவது வருத்தம் அளிக்கிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை வழங்கியது கொஞ்சம் பொருளாதார சுமைகளை குறைத்து இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினார்.

 

 

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிகளை பெற்றுக்கொண்ட திருமதி பி.கண்ணியம்மா, வயது 44, வாழ்க்கை செலவினங்களை குறைக்க மாநில அரசாங்கம் செய்யும் உதவிகள் தமது குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றார். எங்களை போன்ற மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வரும் மாநில அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.


Pengarang :