SELANGOR

119 தாய்மார்கள் ‘கீஸ்’ அட்டைகளை பெற்றுக் கொண்டனர்

கிள்ளான், பிப்ரவரி 15:

செமந்தா சட்ட மன்றத்தில் 119 தாய்மார்களுக்கு அன்புத் தாய் விவேக சிலாங்கூர் அட்டைகள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார் இன்று தெரிவித்தார். இது முதலாம் கட்ட கீஸ் அட்டை விநியோகம் என்று அவர் தெரிவித்தார். அடுத்த கட்டம் கூடிய விரைவில் நடைபெற இருக்கிறது என்று விவரித்தார்.

”  கீஸ் அட்டைகளை முறையாக பயன்படுத்த வேண்டும். இந்த அட்டையை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்,” என்று கம்போங் தோக் மூடா பொது மண்டபத்தில் நடைபெற்றது கீஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது இவ்வாறு  கூறினார்.

 

 

 

 

 

 

செமந்தா சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் டரோயா அல்வி கீஸ் அட்டைகளை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் சந்தோசம் அடைந்துள்ளது மட்டுமில்லாமல் மாநில அரசாங்கத்தின் திட்டம் வெற்றியடைந்துள்ளதை நினைத்து பெருமிதம் கொண்டார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கடந்த நவம்பரில் தாக்கல் செய்த 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கீஸ் அட்டை திட்டத்திற்கு ரிம 72 மில்லியனை ஒதுக்கீடு செய்தார். இந்த திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் ரிம 2,000 குறைந்த வருமானம் பெறும் 30,000 குடும்பங்கள் பயன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :