SELANGOR

ஆட்சிக் குழு உறுப்பினர்: பழுது பார்க்கும் பணிகள் இன்று மாலையில் முடிவடையும்

பெஸ்தாரி ஜெயா, மார்ச் 8:

காற்றழுத்த தண்ணீர் குழாய்களை பழுது பார்க்கும் பணிகள் இன்று மாலை 6 மணி அளவில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து காற்றழுத்த தண்ணீர் குழாய்கள் மோசமாக பாதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் தடைபட்டது என்று சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள், நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படையிலான தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறினார். எஸ்எஸ்பி3 நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுது பார்க்கும் பணிகள் அவசரகால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த விரைவு பணிகளின் மூலம் ஆறு வட்டாரத்தின் 563,622 பயனீட்டாளர்கள் குடிநீர் சேவையை மீண்டும் பெறுவர் என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், எஸ்எஸ்பி3 சுத்திகரிப்பு நிலையத்தை பழுது பார்க்கும் போது தண்ணீர் குழாய் உடைந்தது. இந்த சுத்திகரிப்பு நிலையம் சுங்கை சிலாங்கூர் நீர் நிறுவனத்தின் (ஸ்பலாஷ்) கீழ் செயல்பட்டு வருகிறது என்று ஜைடி குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :