SELANGOR

இந்திய மாணவர்களுக்கான இலவச கணிணி மையத்தை சேவியர் திறந்து வைத்தார்

காப்பார், மார்ச் 4:

காப்பார் வட்டார இந்திய மாணவர்களுக்கான இலவச கணிணி மையத்தை டாக்டர் சேவியர் ஜெயகுமார் திறந்து வைத்தார்.
காப்பாரில் நன்கு அறிமுகமான சமூக சேவையாளர் மோகன நாதனின் இலவச கணிணி மையத்தை,தமிழ் பிள்ளைகளுக்கு இலவசமாக கணிணி வகுப்புகள் நடத்துவதற்காக பிரத்யேகமாக ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கணிணிகளை அமைத்து , நாள்தோரும் மாணவர்கள் வந்து கணிணியை சார்ந்த கல்வியை கற்று கொள்ளவே இந்த ஏற்பாடினை செய்துள்ள மோகன நாதனை மனதார பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


சமூக சேவையின் அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ள இத்திட்டத்திற்கு தன்னுடைய முழு ஆதரவையும் தருவதுடன் இலவச வகுப்புகளை வழி நடத்த கணிணி துறையில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை நடத்துவார்கள் என்பதுடன் அதற்கான முதல் கட்ட ஏற்பாடாக காப்பாரில் ஓர் புதிய மையத்தை உருவாக்கி அதில் கணிணிகளை பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இன்று எல்லாமே கணிணி யுகமாக இருப்பதால் ஆரம்ப பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் கணிணியை முறையாக கற்று கொள்ள பல நூறு வெள்ளியை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால்,வசதி குறைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கே பதிவு செய்து கொள்வதால் முறையான கணிணி அறிவை கற்றுக்கொள்ளும் வழியில் இலவசமாக மாணவர்களுக்கு உயர் நிலை கல்வியை இங்கே கற்று தர உள்ளோம் அதற்கான முழு செலவினையும் தாமும் தன் சக நண்பர்களும் ஏற்று இருப்பதாகவும் மோகன நாதன் தெரிவித்தார்.

#வேந்தன்


Pengarang :