NATIONAL

எல்லை மறுசீரமைப்புக்குக் காத்திருக்க வேண்டியதில்லை: நாடாளுமன்றத்தை கலைக்கலாம்!

ஆராவ், மார்ச் 21:
எல்லை மறுசீரமைப்புக்குக் காத்திருக்காமல், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என தேர்தல் ஆணைய தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா தெரிவித்தார்.
அந்நிலை ஏற்பட்டால், 14ஆவது பொதுத் தேர்தல் ஏற்கெனவே உள்ள எல்லைகளை உட்படுத்தியே நடக்கும். ஏனெனில், தேர்தலும் எல்லை மறுசீரமைப்பும் வெவ்வேறு விஷயங்களாகும்.
ஆகையால், எல்லை மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லாமலே பிரதமரால் நாடாளுமன்ற கலைப்பை அறிவிக்க முடியும். எல்லை மறுசீரமைப்பை பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் கூட மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
இதனிடையே, சில தரப்பினர் குற்றம் சாட்டுவது போல், வாக்கு எண்ணிக்கை முறையில் எவ்வித மாறுதல்களும் கொண்டுவரப்படவில்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற வாக்குகள் இரு முறை எண்ணப்படுகின்றன. முன்பிலிருந்தே இந்த முறைதான் கையாளப்படுகின்றது என அவர் விளக்கினார்.
#தமிழ் முரசு

Pengarang :