NATIONAL

எல்லை மறுசீரமைப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பெர்சே மகஜர்

கோலாலம்பூர், மார்ச் 28:

நாடாளுமன்ற சபாநாயகர் எல்லை மறுசீரமைப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மகஜரை தொடரக்கூடாது என பெர்சே அமைத்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு மகஜரை வழங்கியது.
நாடாளுமன்றத்திற்கு வெளியில் கூடுவதற்கு அனுமதி பெறவில்லை என போலீஸ் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தும் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்டன பேரணியில் கலந்துக் கொண்டனர்.

அவர்களோடு முன்னாள் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா,டான்ஸ்ரீ முகிடின் யாசின் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அவரது துணைவியார் டத்தோ வான் அசிசா உட்பட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

கடுமையான காவல்துறையின் பாதுகாப்பு இருந்தும் பெர்சே குழுவினர் தங்களின் நோக்கத்திலிருந்து பின் வாங்காத நிலையில் நாடாளுமன்ற சபாநாயகரிடம் எதிர்ப்பு மகஜரை வழங்க அக்குழுவை பிரதிநிதித்து 10 பேரை நாடாளுமன்றத்திற்கு நுழைய போலீஸ் பின்னர் அனுமதி அளித்தது.
எல்லை மறுசீரமப்பு குறித்த மகஜரை நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் து ரசாக் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எல்லை மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது.இது நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்காது.ஒரு தரப்பின் வெற்றிக்காக உருவாக்கப்படும் ஒன்று எனவும் பெர்சே உட்பட பல்வேறு அமைப்புகளும் மலேசியர்களும் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வரும் வேளையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் இதனை தாக்கல் செய்திருப்பது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தேசிய முன்னணி தவறிவிட்டதற்கு தக்க சான்று என பெர்சே கூறியது.


Pengarang :