SELANGOR

குடிநீர் தடை மாநில அரசாங்கத்தின் தவறு அல்ல !!!

அம்பாங், மார்ச் 10:

சிலாங்கூர் மாநிலத்தில் 427 பகுதிகளில் ஏற்பட்ட குடிநீர் விநியோகத் தடைக்கு மாநில அரசாங்கம் காரணம் அல்ல என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை  (ஸ்பலாஷ்) கையில் எடுக்கும் முயற்சிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்னும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது என அஸ்மின் அலி கூறினார்.

 

 

 

 

 

”  கடந்த ஜனவரி 26-இல் ஆயர் சிலாங்கூர் நிறுவனம், ஸ்பலாஷ் நிறுவனத்தின் நீர் சுத்திகரிப்பு  பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், ஆயர் சிலாங்கூர் எந்த ஆய்வுகளையும் செய்ய முடியாது. ஆகவே, தேசிய நீர் சேவை ஆணையத்திடம் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டது. இதன் மூலம், சுத்திகரிப்பு இயந்திரங்கள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று தெரிய வந்தது. ஆனாலும், சுத்திகரிப்பு நிலையத்தை பெருநாள் காலத்தில் மூட முடியாது,” என்று கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :